TNPSC Thervupettagam

நகைக் கடைகள் – கர்நாடகா

March 24 , 2021 1251 days 546 0
  • கர்நாடக மாநில அரசானது சில்லறை நகை விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
  • இது கர்நாடக முத்திரையுடன் (Brand) இந்த மஞ்சள் உலோகத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • மேலும் அந்த மாநிலச் சின்னமான “கண்டபெருன்டா” சின்னத்துடன் (புராண காலத்தைச் சேர்ந்த இரட்டைத் தலை பறவை) கூடிய தங்க நாணயங்களை விற்பனை  செய்யவும் திட்டமிட்டுள்ளது.
  • நாட்டில் தங்கம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் கர்நாடகமாகும்.
  • கர்நாடக அரசானது ஹட்டி தங்கச் சுரங்கங்களை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது.
  • மேலும் ஹட்டி தங்கச் சுரங்க நிறுவனத்தை கர்நாடக மாநில (ஹட்டி) தங்கச் சுரங்கங்கள் நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
  • மேலும் அம்மாநில அரசு, கல்யாணா பகுதியில் அப்பகுதியின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்காக நகைகளுக்கான ஒரு பிரத்தியேக சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்