தெலுங்கானாவின் இந்தர்வெல்லி மண்டலத்தில் உள்ள கெஸ்லாப்பூர் கிராமத்தில் 'நகோபா ஜடாரா' கொண்டாடப்படுகிறது.
இது ராஜ் கோண்ட் மற்றும் பிரதான் இனப் பழங்குடியினரின் மெஸ்ராம் குலத்தின் போய்குட்டா கிளையின் புகழ்பெற்ற வருடாந்திரப் பழங்குடியின திருவிழா ஆகும்.
இது தெலுங்கானா மாநிலத்தின் சம்மக்கா சரலம்மா ஜடாராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரியப் பழங்குடியின விழாவாகும்.
கோண்ட் பழங்குடியினர் உலகின் மிகப்பெரிய பழங்குடியினக் குழுக்களில் ஒன்று என்பதோடு, இது நான்கு பழங்குடியினப் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரதான் குழுவினர் கோண்ட் பழங்குடியினரின் உட்கிளையாகக் கருதப்படுகிறார்கள்.
அவர்கள் கோண்ட் இனப் பிரிவினருக்கு வேண்டி புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அவர்களின் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பாடல்களைப் பாடுகின்றப் பாரம்பரியப் பாடகர்களாக உள்ளனர்.