ஐக்கிய நாடுகள் சபையானது, நக்பா நிகழ்வின் 75வது ஆண்டு நிறைவு விழாவினை நினைவு கூரும் வகையில் உயர்மட்டச் சிறப்புக் கூட்டத்தினை நடத்தவுள்ளது.
“பேரழிவு” என்பதற்கான அரபு மொழிச் சொல்லான நக்பா என்ற சொல், சுமார் 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்திலிருந்துப் பெருமளவில் இடம் பெயர்ந்ததனைக் குறிக்கிறது.
1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று, இஸ்ரேல் நாடு தனது சுதந்திரத்தை அறிவித்த நேரத்தில், சுமார் 250,000 முதல் 350,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
அந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளான மே 15 ஆம் தேதியன்று நக்பா தினம் என்று அறியப் பட்டது.
ஒரு சர்வதேச அமைப்பு இத்தினத்தினை நினைவு கூர்வது இதுவே முதல் முறையாகும்.