ஒரு "மாபெரும் நிலநடுக்கம்" மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒரு சுனாமி என்பது ஜப்பானில் 298,000 பேர் வரையிலான உயிர் பலியையும், சுமார் 2 டிரில்லியன் டாலர்கள் வரையில் சேதத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
நங்காய் பள்ளம் என்ற பகுதியில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 8–9 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்படுவதற்கான நிகழ்தகவு 70-80% ஆகும்.
நங்காய் பள்ளம் என்பது ஷிசுவோகாவிலிருந்து கியூஷு வரை நீண்டு காணப்படும் 900 கிலோமீட்டர் நீளமுள்ள கடலுக்கு அடியில் உள்ள ஒரு பிளவு ஆகும்.
இங்கே, பிலிப்பைன்ஸ் கடல்சார் கண்டத் தட்டு ஆனது "கீழமுங்குகிறது" அல்லது ஜப்பான் அமைந்துள்ள கண்டத் தட்டின் கீழ் மெதுவாக கீழிறங்குகிறது.
கடந்த 1,400 ஆண்டுகளில், ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை நங்காய் பள்ளத்தில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்ற ஒரு நிலையில் அவற்றுள் மிகச் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1946 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.