TNPSC Thervupettagam

நசீம்-அல்-பஹ்ர்

December 22 , 2017 2562 days 847 0
  • நசீம்-அல்-பஹ்ர் என்றழைக்கப்படும் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற்படை கூட்டுப்பயிற்சியின் 11வது பதிப்பு இந்த ஆண்டு ஓமனின் உடாம் பகுதியிலுள்ள சையத் பின் சுல்தான் கடற்படை தளத்தில் துவங்கியுள்ளது.
  • 1993ஆம் ஆண்டிலிருந்து இரு ஆண்டிற்கு ஒருமுறை (Biennial) நடைபெறும் இந்த கூட்டுப்போர் பயிற்சியானது, இந்தியா மற்றும் ஓமனின் இருதரப்பு கூட்டுப் போர் பயிற்சிகளின் 24வது வருடத்தை குறிக்கும் விதமாக இவ்வாண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்தியாவின் இரு கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் டிரைகண்ட் மற்றும் ஐ.என்.எஸ்.டேக் ஆகியவை ஓமனில் நடைபெறவுள்ள இக்கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.‘
  • மேலும் இந்தியாவின் ஓர் நீர்மூழ்கி கப்பலும் P81 என்ற நீண்ட தூர பயணத் திறனுடைய கடற்படை விமானமும் இக்கூட்டுப்போர் பயிற்சியில் முதன்முறையாக பங்கேற்க உள்ளன.
  • நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா அரபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நாடான ஓமனுடன் பண்டைய கடல்சார் பாரம்பரியத்தையும் கடல்சார் தொடர்பையும் கொண்டுள்ளது.
  • 1953ஆம் ஆண்டு இந்தோ-ஓமன் நட்பு, வர்த்தகம், பயண வழிகாட்டல் ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையே அதிகாரப்பூர்வமாக இரு தரப்பு உறவு ஏற்படுத்தப்பட்டது.
  • இதுவே இந்தியாவிற்கும், ஓர் அரபு நாட்டிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட முதல் நட்பு, வர்த்தக, பயணப் போக்குவரத்து ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்