நச்சுத்தன்மை அல்லாத மூலக்கூறு அடிப்படையிலான புதிய சிகிச்சை
November 3 , 2024 68 days 94 0
புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள், அல்சைமர் நோய்க்கு நன்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய நச்சுத்தன்மையற்ற மூலக்கூறுகளை உருவாக்கியுள்ளனர்.
நரம்பு மண்டலச் சீரழிவு நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பயனளிக்கக் கூடிய செயற்கை, கணக்கீட்டு மற்றும் பாதிப்பிடம் சார்ந்த ஆய்வுகளின் கலவையை இக்குழு பயன்படுத்தியது.
அல்சைமர் என்பது சில ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது.
இது மறதி நோயின் மிகவும் பொதுவான வடிவமாகும் மற்றும் உலகளவில் 55 மில்லியன் மக்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேரை பாதிக்கிறது.
கொலினெஸ்டெரேஸ் நொதிகளை திறம்பட குறிவைத்து புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சில மூலக்கூறுகளானது நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் மிக முக்கியமான அசிடைல்கொலின் கிடைக்கும் தன்மையினை மேம்படுத்துகிறது.