TNPSC Thervupettagam

நடத்தை விதிமுறை மீறலை அறிக்கையிடும் செயலி

May 25 , 2018 2375 days 721 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI), 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல மொழிகள் கொண்ட நடத்தை விதிமுறை மீறலை அறிக்கையிடும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயலியானது, அரசியல் கட்சிகள், அவைகளின் வேட்பாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் (Activists) ஆகியோரின் முறைகேடுகள்/தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை ECI உடன் நேரடியாகப் பகிர்வதற்கு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்டது.

  • இந்த செயலியானது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான புகைப்படங்கள், குறு கேட்பொலி (Short Audio) மற்றும் காணொளிப் பதிவுகள் (Video Clips) ஆகியவற்றை அந்தந்த இடங்களிலிருந்தே பகிர்வதற்கு அனுமதியளிக்கிறது.
  • இந்த செயலியானது முதல் முறையாக, சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பெங்களூருவில் (கர்நாடக மாநிலத்தின் தலைநகரம்) அறிமுகப்படுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்