இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI), 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல மொழிகள் கொண்ட நடத்தை விதிமுறை மீறலை அறிக்கையிடும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியானது, அரசியல் கட்சிகள், அவைகளின் வேட்பாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் (Activists) ஆகியோரின் முறைகேடுகள்/தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை ECI உடன் நேரடியாகப் பகிர்வதற்கு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்டது.
இந்த செயலியானது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான புகைப்படங்கள், குறு கேட்பொலி (Short Audio) மற்றும் காணொளிப் பதிவுகள் (Video Clips) ஆகியவற்றை அந்தந்த இடங்களிலிருந்தே பகிர்வதற்கு அனுமதியளிக்கிறது.
இந்த செயலியானது முதல் முறையாக, சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பெங்களூருவில் (கர்நாடக மாநிலத்தின் தலைநகரம்) அறிமுகப்படுத்தப்பட்டது.