TNPSC Thervupettagam

நடுவண் தீர்ப்பாயச் சட்டத்தின் சீர்திருத்தம்

June 21 , 2023 398 days 249 0
  • 1996 ஆம் ஆண்டு நடுவண் மற்றும் சமரசச் சட்டத்தில், சீர்திருத்தங்களை மேற் கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்கச் செய்வதற்காக முன்னாள் சட்டச் செயலாளர் T.K. விஸ்வநாதன் என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
  • முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி BN ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • ஒரு வழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்புகளோடு சேர்த்து, நடுவண் தீர்ப்பாயச் செயல்முறை, நடுவர் மன்றம், நடுவர் மன்றத்தின் நடைமுறை ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
  • நடுவர் மன்றத் தீர்ப்பின் முடிவிற்கு வழக்கின் தரப்பினர் கட்டுப்பட வேண்டும் என்ற வகையில் இது இசைவு ஒப்பந்த வடிவில் வழங்கப்படுகிறது.
  • இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் நீதிமன்றங்களுக்கு ஒரு மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறையையும் இச்சட்டம் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்