TNPSC Thervupettagam

நட்சத்திர உருவாக்கத்தின் அதிவேகச் செயல்முறை

March 20 , 2023 489 days 245 0
  • SOFIA தொலைநோக்கியானது, முன்பு நம்பப்பட்டதை விட, மிக விரைவான நட்சத்திர உருவாக்கச் செயல்முறை குறித்து வெளிப்படுத்தியுள்ளது.
  • பூமியிலிருந்து சுமார் 5,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரங்கள் உருவாகும் இடமாக உள்ள சிக்னஸ் X பகுதியானது வாயு மற்றும் தூசி ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு பரந்த ஒளிரும் திரளினைக் கொண்டுள்ளது.
  • சிக்னஸ் X பகுதியில், வாயு திரள்கள் அணு அமைப்புகளால் சூழப்பட்ட மூலக்கூறு ஹைட்ரஜனின் அடர்த்தியான கருவங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப் பட்டது.
  • இந்த மேகங்கள் பின்னர் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு புதிய நட்சத்திரங்களை விரைவாக உருவாக்குகின்றன.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் குறிப்பாக மாபெரும் நட்சத்திரங்கள் உருவாகும் செயல்முறையைச் சிறப்பாக விளக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்