ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா விண்வெளி தொலைநோக்கியானது சிவன் மற்றும் சக்தி என பெயரிடப்பட்ட இரண்டு மிகப் பழங்கால நட்சத்திர ஓட்டங்களை (இயக்கங்கள்) வெளிக் கொணர்ந்துள்ளது.
பால் வெளி அண்டத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலை இவை மிகவும் கணிசமாக மேம்படுத்தியுள்ளன.
இந்த வானியல் வடிவங்கள், 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பிணைக்கப் பட்டவையாகும்.
அவை நமது அண்டத்தின் உருவாக்கத்திற்கு வெகுவாகப் பங்களித்த ஆரம்பகாலக் கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
அவை பால்வெளி அண்டத்தின் சுழல் பகுதி மற்றும் வட்டு ஆகியவற்றின் மிகப் பழமையான பகுதிகளை விட முந்தையவையாகும்.
ஒவ்வொரு ஓட்டங்களும், குறிப்பிடத்தக்க வகையில் ஒத்த சுற்றுப்பாதைகள் மற்றும் கலவைகளில் நகரும் வகையிலான சும்மார் 12 முதல் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலான நட்சத்திரங்களுடன் சுமார் 10 மில்லியன் சூரியன்களைக் கொண்டு இயங்குகின்றன.