TNPSC Thervupettagam

நட்சத்திரங்களில் லித்தியம் உற்பத்தி

July 13 , 2020 1600 days 585 0
  • நட்சத்திரங்களில் லித்தியம் உற்பத்தி செய்யப் படுவது தொடர்பான கேள்விக்கான ஒரு விடையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • செம்பெருமீனாக (red giant) தாம் உருவாகும் போது நட்சத்திரங்கள் உண்மையில் லித்தியத்தை அழிக்கின்றன.
  • நட்சத்திரங்களை விடவும் கிரகங்களிடம் லித்தியம் அதிகம் இருப்பதாக அறியப் படுகிறது.
  • இருப்பினும், சில நட்சத்திரங்கள் லித்தியம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டு உள்ளன.
  • நட்சத்திரங்கள் அவற்றின் செம்பெருமீன் நிலையைத் தாண்டி வளரும் போது அவை செம்பெருமீன் கூட்டம் என்று அழைக்கப் படுகின்றன.
  • இந்நிலையில் அவை லித்தியத்தை உற்பத்தி செய்கின்றன.
  • இது ஹீலியம் ஃப்ளாஷ் (Flash) என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த ஆய்வு நட்சத்திரங்களில் உள்ள அணுக்கருத் தொகுப்பாக்கத்தின் (Nucleosynthesis) தற்போதைய புரிதலைச் சவாலுக்கு அழைக்கிறது.
  • அண்ட பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பாக்கத்தின் கோட்பாடானது, தோராயமாக பிரபஞ்சத்தின் 25% அளவானது ஹீலியத்தாலானது என்று கணித்து உள்ளது.
  • பிரபஞ்சத்தில் தற்போது லித்தியம் இருப்பது அசல் மதிப்பை விடவும் (அண்ட பெருவெடிப்பின் போது இருந்த அளவினை விட) அதிகமாக நான்கு மடங்கு மட்டுமே.
  • இன்று பொதுவாக லித்தியமானது தகவல்தொடர்பு சாதனத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப் படுகிறது.
  • இது சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் ஏற்பட்ட அண்ட பெருவெடிப்பின் சமயத்தில் பிரபஞ்சம் தோன்றிய போது மற்ற கூறுகளுடன் சேர்ந்து உருவானது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்