நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
November 29 , 2021
1001 days
496
- புனேவிலுள்ள தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தினைச் சேர்ந்த வானியலாளர்கள் 8 நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
- அவை முதன்மை வரிசை ரேடியோ இயக்க உமிழ்விகள் (Main-sequence Radio Pulse emitters – MRPs) எனப்படும் அரிய வகையைச் சேர்ந்தவை.
- MRPs ஆனது புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய மீட்டர் அளவு ரேடியோ அலை தொலைநோக்கியின் மூலம் கண்டறியப்பட்டது.
- இதற்கு முன்பு, இந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதே போன்ற மேலும் மூன்று நட்சத்திரங்களை இக்குழு கண்டறிந்துள்ளது.
- எனவே, இதுவரையில் 15 கண்டறியப்பட்ட MRPs உள்ளன.
- 11 MRP உமிழ்விகள் மிகப்பெரிய மீட்டர் அளவு ரேடியோ அலை தொலைநோக்கியைக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்டன.
- 2021 ஆம் ஆண்டில் மட்டும் 8 MRP உமிழ்விகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Post Views:
496