11 ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், "நதிவாழ் ஓங்கில்களுக்கான (டால்பின்) உலகப் பிரகடனம்" என்ற உலகளாவியப் பிரகடனத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டன.
இது உலகில் எஞ்சியிருக்கும் ஆறு ஓங்கில் இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
பொறுப்புமிக்க நன்னீர்வாழ் ஓங்கில் வளங்காப்பினை மையமாகக் கொண்டு, நதி வாழ் ஓங்கில்கள் காணப்படும் 14 நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பிரகடனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து நதி ஓங்கில் இனங்களின் எண்ணிக்கை குறைவினை நிறுத்தச் செய்வதையும், மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள இந்த இனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீன நதிவாழ் ஓங்கில் அல்லது பைஜி எனப்படும் ஏழாவது நதிவாழ் ஓங்கில் இனமானது, 2007 ஆம் ஆண்டில் அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.