தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) கீழ் வணிக மாதிரி அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெண்களை மையமாகக் கொண்ட நிதி உதவி, திட்ட உருவாக்கம், ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் கட்டமைப்பாகும்.
மகளிர் கூட்டுறவு அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவிகளுக்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகை வரம்புகள் என்று எதுவும் இல்லை.
NCDC ஆனது புதிய மற்றும் புதுமையான நடவடிக்கைகளுக்கு தவணைக் கடன் பகுதியின் மீதான வட்டி விகிதம் மீது 2% வட்டி மானியத்தை வழங்குகிறது.
மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்குமான தவணைக் கடன் பகுதியின் மீதான வட்டி விகிதத்தில் 1% வட்டி மானியம் வழங்கப் படுவது மூலம் மகளிர் கூட்டுறவுச் சங்கங்களின் கடன் பெறும் செலவினங்கள் குறைகிறது.