TNPSC Thervupettagam
March 22 , 2018 2342 days 672 0
  • ஜகன்நாத் கடவுளுக்கான நபாகலேபர் திருவிழாவின் (Nabakalebar festival) போது இந்திய குடியரசுத் தலைவர் 10 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நாணய மதிப்புகளில் (Denominations) நினைவு நாணயங்களை (Commemorative coins) வெளியிட்டுள்ளார்.
நபாகலேபர் திருவிழாவைப் பற்றி 
  • ஜகன்நாத் ஆலயங்களோடு தொடர்புடைய பண்டையச் சடங்கே நபாகலேபர் திருவிழாவாகும். இச்சடங்குகளின் போது ஜகன்நாத் ஆலயங்களில் உள்ள ஜகன்நாத் (Lord Jagannath), பாலாபத்ரா (Balabhadra), சுபத்ரா (Subhadra), சுதர்ஷன் (Sudarshan) ஆகிய கடவுள்களின் சிலைகள் அவற்றினுடைய புது சிலைகள் கொண்டு மாற்றப்படும்.
  • இந்து நாட்காட்டிப்படி, கூடுதலாக அஷாதா மாதத்தை (Ashadha masa/month) கொண்ட ஆண்டானது இத்திருவிழா நடத்துவதற்கு மங்களகரமான  (auspicious) மாதமாகக்  கருதப்படும். ஒவ்வொரு 12 முதல் 19 வருடங்களுக்கு இடையிலான காலத்தில் இத்திருவிழா நடைபெறும்.
  • தாரு பிரம்மா (Daru Bramha) எனும் சிறப்பு வகை வேப்பமரக் கட்டைகளிலிருந்து இத்தெய்வங்கள் செய்யப்படுகின்றன.
  • இதற்கு முன் இத்திருவிழா 1996-ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2015-ல் நடைபெற்றது.
  • ஒடிஸா மாநிலத்தின் பூரியில் உள்ள ஜகன்நாத் கோயிலில் இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்