தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக ரூ.1000 கோடி அளவிலான கடன் உறுதி நிதி அறக்கட்டளை அமைப்பினை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
இது வேளாண் உற்பத்தியாளர் அமைப்பிற்கு கடன் உறுதியினை வழங்குவதற்கான ஒரு பிரத்தியேக நிதியாகும்.
இந்த நிதியானது நப்சன்ரக்சான் டிரஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது முழுவதும் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும்.