கங்கை துப்புரவிற்கான தேசிய திட்ட அமைப்பு (National Mission for clean Ganga) கங்கையின் தூய்மைக்கான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கழிவு நீர் மேலாண்மையோடு தொடர்புடைய 3 திட்டங்கள் மேற்கு வங்கத்திலும், ஒரு திட்டம் உத்தராகண்ட் மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது. மலைவழிப்பாதை மேம்பாட்டு பணியானது வாரணாசியிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஐந்து திட்டங்களுக்கான உத்தரவுகளோடு, கங்கை நதிப்படுகைகளில் அமைந்துள்ள நகரங்களின் உயர் மாசுபாடுகளை நீக்குவதற்கான கழிவுநீர் மேலாண்மை தொடர்புடைய அனைத்துத் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்குவது நிறைவடைந்துள்ளது.