முதல் முறையாக நடத்தப் பெறும் நமாமி பராக் திருவிழாவை அஸ்ஸாமில் உள்ள சில்சார் எனும் இடத்தில் அஸ்ஸாமின் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
3 நாட்கள் நடைபெறும் இத்ந நதித் திருவிழா பராக் நதி பள்ளத்தாக்கிலுள்ள ஹைலகண்டி, கரிம்கஞ்ச், சில்சார் எனும் மூன்று பகுதிகளில் நடைபெற உள்ளது.
பராக் நதிக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், பராக் நதியின் ஆற்றல் வளம் மற்றும் முக்கியத்துவத்தை காட்சிப்படுத்தவும், வணிகம் மற்றும் வர்த்தகத்தின் முனையமாக உருவாகிட பராக் நதிக்கு உள்ள சாத்தியங்களை காட்சிப்படுத்தவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
பராக் நதியானது தென் அஸ்ஸாமின் மிக முக்கிய நதிகளுள் ஒன்று. இது சுர்மா – மேக்னா நதி அமைப்பின் ஒரு பகுதியாகும்.
பராக் நதி மணிப்பூரில் தோன்றி, மிசோரம், அஸ்ஸாம் வழியே பாய்ந்து வங்கதேசத்தின் உள் நுழையும் இடத்தில் சுர்மா மற்றும் குஷியாரா என இரு நதிகளாகப் பிரிகின்றது.