நமோ ட்ரோன் திதி எனப் படுகின்ற ஒரு மத்திய அரசுத் திட்டத்தின் செயல்பாட்டு வழி காட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
2024-25 முதல் 2025-2026 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 14 ஆயிரத்து 500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லாத விமானங்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக, அதிகபட்சம் எட்டு லட்சம் வரையிலான மதிப்பு கொண்ட ஆளில்லா விமானம் மற்றும் அதன் துணைக்கருவிகளின் விலையில் 80 சதவீதம் ஆனது பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஏறத்தாழ 15 நாட்கள் வரையிலான பயிற்சிக்குத் தேர்வு செய்யப் படுவார்.
இது கட்டாய ஆளில்லா விமான இயக்கப் பயிற்சி மற்றும் வேளாண் நோக்கத்திற்கான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பூச்சிக் கொல்லிப் பயன்பாட்டிற்கான கூடுதல் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.