TNPSC Thervupettagam

நம்பிக்கை சாராத, உறுதிப்படுத்துதல் சார்ந்த சரிபார்ப்பு

December 27 , 2023 338 days 224 0
  • முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 10,000 பயனர்களுக்கு என்று பாதுகாப்பான மின்னஞ்சல் அமைப்பை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • நம்பிக்கை சாராத, உறுதிப்படுத்துதல் சார்ந்த சரிபார்ப்பு (ZTA) முறையில் செயல் படும் இந்த மின்னஞ்சல் அமைப்பானது தேசிய தகவல் மையத்தால் (NIC) வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த 10,000 மின்னஞ்சல் முகவரிகளும் 17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • இதற்கு, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் மட்டுமின்றி தற்போது இரண்டு அடுக்கு சரிபார்ப்பு முறை செயல்படுத்தப் பட்டுள்ளது.
  • கடவுச்சொற்களோடு சேர்த்து, முக அங்கீகாரம் அல்லது உடல் சார் குறியீடு என்ற ஒரு சரிபார்ப்பும் அவசியமாகும்.
  • உள்நுழைவு மற்றும் வெளியேறும் நேரங்கள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப் படுகின்றன.
  • 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை குடிமக்கள் தரவுகள் சம்பந்தப்பட்ட 165 தரவு மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்