TNPSC Thervupettagam

நம்ம பள்ளி அறக்கட்டளை

December 21 , 2022 579 days 678 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியார் துறைகளின் பங்களிப்புடன் அதை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்.
  • உள்கட்டமைப்பு மற்றும் நன்மதிப்பின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளை சிறப்பாகச் செயல்படச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கல்வியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் (NGOs) உறுப்பினர்களிடையேயான திட்டமாக இருக்கும்.
  • இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் படித்து, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து நடத்துவர்.
  • சுற்றுச்சுவர், ஓவியம், இணையதள வசதிகள், சுகாதார கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப் பட உள்ளது.
  • TVS மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், நம்ம பள்ளி அறக்கட்டளை திட்டத்தின் தலைவராகவும், விஸ்வநாதன் ஆனந்த் இத்திட்டத்தின் தூதராகவும் உள்ளனர்.
  • நம்ம ஊர் பள்ளித் திட்டமானது இதன் விரிவாக்கத் திட்டமாகும்.
  • உள்ளூர் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தொழில் துறையினர் மற்றும் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை இணைப்பதற்கான அடித்தளத்தினை நம்ம ஊர் பள்ளித் திட்டம் நிறுவுகிறது.
  • முன்னதாக, மாநிலப் பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தின் பெயரினை “பேராசிரியர் K.அன்பழகன் கல்வி வளாகம்” என்று முதல்வர் அவர்கள் பெயர் மாற்றம் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்