TNPSC Thervupettagam

நரோபா திருவிழா

September 26 , 2018 2124 days 623 0
  • லடாக் பகுதியில் நடைபெற்ற ஐந்து நாள் நரோபா திருவிழாவானது லடாக்கி நடனத்தில் கின்னஸ் உலக சாதனையுடன் முடிவடைந்தது.
  • திபெத்தியன் நாள்காட்டியின் ஒவ்வொரு 12வது வருடத்திலும் கொண்டாடப்படும் இந்த திருவிழா ‘இமயமலைகளின் கும்பமேளா’ எனவும் அறியப்படுகிறது.
  • பௌத்த துறவியான அறிஞர் நரோபாவின் போதனைகள் மற்றும் பிரசங்கங்களை இந்த திருவிழா கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டின் முடிவைக் குறிக்க 299 லடாக்கியப் பெண்கள் பாரம்பரிய உடைகளில் ஒன்றாக இணைந்து ‘ஷோன்டோல்’ என்ற நடனத்தை ஆடினர். இந்த பாரம்பரிய நடனமானது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.
  • விழாவின் முடிவில் ‘செரிங் லடோல்’ என்பவருக்கு ‘ஹிமாலயன் ஹீரோ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • செரிங் லடோல், 2005-ல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த லடாக்கை சேர்ந்த முதல் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்