இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளானது ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய நல் ஆளுகை (Good Governance) தினமாக கடைபிடிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் வெளிப்படையான, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு உள்ள நிர்வாக அர்ப்பணிப்பை பற்றி மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை தரநிலைப்படுத்துவதற்காகவும், நாட்டின் மக்களுக்கு அதிகத் திறனுடைய, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்கிடும் வகையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நிர்வகிப்பில் அரசுக்கு உள்ள பொறுப்புடைமையைப் பற்றி மக்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரித்து அதன் மூலம் வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்ட்டது.
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய் நான்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து (உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி) வெவ்வேறு காலங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதியாவார்.