TNPSC Thervupettagam

நல் ஆளுகை மீதான இரு நாள் பிராந்திய மாநாடு

December 24 , 2017 2573 days 839 0
  • நல் ஆளுகை (Good Governance) மற்றும் சிறந்த நிர்வாக நடைமுறைகளை பிரதிபலித்தல் (Replication of Best Practices) போன்றவற்றின் மீதான இரு நாள் பிராந்திய மாநாடு கவுகாத்தியில் நடைபெற்றது.
  • நாட்டின் அனைத்து மாநிலங்களையும் அவற்றின் ஆளுகைச் செயல்பாட்டுகளின் அளவைப் பொறுத்து தரவரிசைப்படுத்திட ஐந்து முக்கிய அளவுருக்கள் உள்ளன என்று மாநிலங்களை தரவரிசைப்படுத்துவதற்கான நல் ஆளுகை குறியீட்டின் மீதான தொழிற்நுட்ப அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
  • குடிமக்களுக்கான ஆளுகையை (Governance) மேம்படுத்துவதே மாநிலங்களை ஆளுகையின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துவதற்கான நோக்கமாகும்.
  • இத்தகு தரவரிசை மாநிலங்களுக்கிடையே போட்டித்தன்மையுடைய கூட்டாட்சித்துவத்தை (Competitive Federalism) ஏற்படுத்தும்.
  • இந்தியா முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 150 பங்கேற்பாளர்கள் இந்த இரு நாள் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்