நாட்டிலே முதன் முறையாக, தெலுங்கானா வனத்துறை அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் உள்ள நல்லமலை வனங்களில் சுட்டிமான்/எலிமான்களை (Mouse Deer) மறு-அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட எலிமான்கள் தங்களை வனசூழலுக்கு தகவமைத்து கொண்டன என அறிய வரும் வேளையில் நேரு விலங்கியல் பூங்காவில் பெருக்கப்பட்டு வரும் பிற சுட்டிமான்களும் இதே செயல்முறை பின்பற்றலின் வழி வனங்களில் விடப்பட்டு புலிகள் காப்பகத்தின் (Tiger Reserve) உயிரி பல்வகைத்தன்மை (Bio-diversity) கூட்டப்படும்.
இந்த சுட்டிமான்/எலிமான்கள் புள்ளியுடைய செவ்ரோடைன் (Spotted Chevrotain) எனவும் அழைக்கப் படுகின்றது.
வழக்கமாக நாட்டின் இலையுதிர் மற்றும் பசுமை மாறா காடுகளில் (deciduous & evergreen) காணப்படும் இவை அழியும் தருவாயிலுள்ள (endangered species) உயிரினமாகும்.
மார்ச் 2010-ல் நேரு விலங்கியல் பூங்கா, LACONES மற்றும் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தோடு சுட்டிமான்/எலிமான்களுக்கான பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக 6 வருடங்களில் தற்போது அவற்றின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.