ஒன்றிய சாலைத் துறை அமைச்சகமானது 'நல்லிரக்கப் பண்புடையவர்கள்' என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை விபத்து நடந்து 'கோல்டன் ஹவர்' எனப்படும் ஒரு சில குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றும் நபர்களுக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப் படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்தது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அவசரமான சூழலில் உதவுவதற்கு முன் வருமாறு பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
'கோல்டன் ஹவர்' என்பது ஒரு அதிர்ச்சிகரமான விபத்தினைத் தொடர்ந்து 1 மணி நேர நேரத்திற்குள் உடனடி மருத்துவ உதவியை வழங்கினால் மரணத்தைத் தடுக்க அதிகம் வாய்ப்பு உள்ள காலம் ஆகும்.
சாலை விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பு
ஒரு நபருக்கு ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 முறை பரிசுத் தொகை வழங்கப் படும்.
அனைத்து விபத்துகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஒரு மாவட்ட நிலை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்துப் பதிவுகள் போக்குவரத்து ஆணையரிடம் ரூ.5000 பரிசுத் தொகைக்காகப் பரிந்துரைக்கப்படும்.