TNPSC Thervupettagam

நவிகா சாகர் பரிக்கிரமா

August 19 , 2017 2686 days 1084 0
  • இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.வி தரிணி பாய்மரக் கப்பலில் பயணித்து இந்திய கடற்படையின் ஆறு பெண் அதிகாரிகள் உலகைச் சுற்றிவரவுள்ளனர்.  முற்றிலும் பெண்களை உள்ளடக்கிய குழுவொன்று உலகத்தை கப்பலில் சுற்றி வருவது இந்தியாவில் இதுவே முதன்முறை ஆகும். இந்த பயணமானது செப்டம்பர் 17 அன்று துவங்கவுள்ளது.
  • ஐ.என்.எஸ்.வி தரிணி கப்பல் , ஐ.என்.எஸ்.வி ஹதேய் (INSV Mhadei) கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்தக் கடல்வழி பயணமானது இந்திய கடற்படை செயல்பாடுகளையும் , இந்தியாவின் ‘நரி சக்தி’ திட்டத்தினையும் ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்: நரி சக்தி பெண்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ளவும் , முன்னேற்றம் காணவும் அரசாங்கம் தன் திட்டங்களின் மூலம் ஒத்துழைக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சமூக மனப்பான்மை மற்றும் மனநிலையை மாற்றும் நோக்கத்திலும் , சவாலான சூழலில் பெண்கள்  பங்கேற்பதை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்தக் கடல்வழிப் பயணம் அமையும். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இந்த பாய்மரக் கப்பற்பயணம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவில் உருவாக்குவோம் முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட கப்பலில் உலகைச் சுற்றி வருவது , ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (Make in India’) திட்டத்தினைப் பறைசாற்றும் விதமாக அமையும். வானிலை / பெருங்கடல் / அலை தரவு கண்காணிப்பு இந்தக் குழுவானது தினசரி அடிப்படையில் வானிலை மற்றும் பெருங்கடல் தொடர்பான பல தரவுகளை அளிக்கும் . இத்தரவுகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . இக்குழு கடல் மாசுபடுவது குறித்த தரவுகளையும் அவ்வப்போது வழங்கும். சாகசப் பயணம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக அமையும் இந்தப் பயணத்தின்போது,  இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களை பல்வேறு துறைமுகங்களில் சந்தித்து கடற்படை பெண் அதிகாரிகள் உரையாடத் திட்டமிட்டுள்ளனர்.  
  • கப்பலில் உலகம் முழுவதும் சுற்றிவரும் முதல் இந்தியக் கப்பற்படைப் பயணமானது ஆகஸ்ட் 19 , 2009  அன்று துவங்கி மே 19 , 2010 அன்று முடிவு பெற்றது. இந்தப் பயணத்திற்கு தலைமை தாங்கியவர் படைத்தலைவர் திலிப் டேன்டே ஆவார்.  இவர் தலைமையிலான குழு ஐ.என்.எஸ்.வி ஹதேய் (INSV Mhadei) கப்பலில் உலகினைச் சுற்றி வந்தனர்.
  • தனிமையாக , இடைநில்லாமல் உலகினை சுற்றி வந்த முதல் இந்தியர் கமாண்டர் அபிலாஷ் டோமி ஆவர் . இவர் நவம்பர் 01 , 2012  இல் துவங்கி மார்ச் 31, 2013 அன்று உலகினை சுற்றி வந்தது சாதனைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்