TNPSC Thervupettagam

"நவீன கால அடிமைத்தனத்தின் உலகளாவிய மதிப்பீடுகள்" அறிக்கை

September 18 , 2022 674 days 447 0
  • நவீன கால அடிமைத் தனத்திற்கான 2021 ஆம் ஆண்டு உலகளாவிய மதிப்பீடுகள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில், 50 மில்லியன் மக்கள் நவீன கால அடிமைத்தனத்தில் வாழச் செய்கின்றனர்.
  • அவர்களில் 28 மில்லியன் பேர் கட்டாய உழைப்பு முறையிலும், 22 மில்லியன் பேர் கட்டாயத் திருமண வாழ்வியல் முறையிலும் சிக்கியுள்ளனர்.
  • அனைத்து கட்டாயத் தொழிலாளர்களில் 52 சதவீதம் பேர் மேல்-நடுத்தர அல்லது உயர் வருமானம் உள்ள நாடுகளில் காணப்படுகின்றனர்.
  • 86 சதவீத அளவிலான கட்டாய உழைப்பு முறை தனியார் துறையில் காணப்படுகிறது.
  • வணிக ரீதியிலான பாலியல் சுரண்டல் தவிர மற்ற துறைகளில் காணப்படும் கட்டாய உழைப்பு முறையானது அனைத்து வகையான கட்டாய உழைப்பு முறையில் 63 சதவீதம் ஆக உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டின் உலகளாவிய மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் 6.6 மில்லியன் மக்கள் கட்டாயத் திருமண முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தோர் அல்லாத வயது வந்த தொழிலாளர்களை விட மூன்று மடங்கு அதிகமாகக் கட்டாய உழைப்பு முறையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்