TNPSC Thervupettagam

நவீன மனிதத் தோற்றம் @ போட்ஸ்வானா

October 31 , 2019 1759 days 711 0
  • நவீன கால மனிதர்கள் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் வடக்கு போட்ஸ்வானாவின் ஒரு பகுதியில் தோன்றி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
  • நவீன மனிதர்கள் (ஹோமோசேபியன்ஸ்) ஆப்பிரிக்காவில் தோன்றியவர்கள் என்று நீண்ட காலமாக அறியப்பட்டாலும், நம் மனித இனத்தின் பிறப்பிடத்தின் துல்லியமான இருப்பிடத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
  • இது குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்காக ஒரு குழுவானது 1200 கோய்சன் இன மக்களிடமிருந்து உயிரணு ஆற்றல் நுண்ணுறுப்பான டி.என்.ஏ (மைட்டோகாண்ட்ரியல்) மாதிரிகளை ஆய்வு செய்தது.
  • மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆனது தாயிடமிருந்து குழந்தைக்குச் செலுத்தப் படுகின்றது. இன்று உயிருடன் இருக்கும் மனிதர்களின் பழமையான தாய்வழி உறவை வரைபடமாக்க இது பயன்படுத்தப் பட்டது.
  • ஜாம்பசி ஆற்றின் தெற்கே உள்ள நிலப் பரப்பானது 200,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோசேபியன்களின் செழிப்பான இருப்பிடமாக மாறியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்