புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய புகழ்பெற்ற நாடகக் குழுவான கூத்துப் பட்டறையின் நிறுவனருமான நா.முத்துசாமி சென்னையில் காலமானார்.
இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியன்று தனது 82வது வயதில் காலமானார்.
தஞ்சையில் பிறந்த இவர் 1977 இல் தனது நாடகங்களுக்காக நடிகர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக கூத்துப் பட்டறையைத் தொடங்கினார்.
முதலாவது நவீன தமிழ் நாடக ஆசிரியராக அறியப்படும் இவர், “காலம் காலமாக” என்ற நாடகத்தை அரங்கேற்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமடைந்தார்.
2012 இல் பத்மஸ்ரீ விருதும் 1999 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
2000 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் கூத்துப் பட்டறை நாடகக் கலையைக் கற்பதற்கான 5 பயிற்சி மையங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அடையாளம் காணப்பட்டது.