நாகாலாந்து சட்டமன்றம் ஆனது, 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி அமைப்புகள் மசோதாவினை நிறைவேற்றி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைத் தக்க வைத்துக் கொண்டது.
முன்னதாக, 2001 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி அமைப்புகள் சட்டத்தினை குரல் வாக்கெடுப்பு மூலம் சபை திரும்பப் பெற்றது.
பல நாகா அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) பெண்களுக்கான இட ஒதுக்கீடு தங்கள் சமூகத்தின் வழக்காற்று சட்டங்களுக்கு எதிரானது என்று கூறின.
அதன்பிறகு, வடகிழக்கு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் எதுவும் நடத்தப் பட வில்லை.
முந்தைய நகராட்சிச் சட்டத்தில் கூறப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பொறுப்பிற்கு பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடுக்கான விதிமுறையானது, 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி மசோதாவில் சேர்க்கப் பட வில்லை.
குறிப்பிட்ட நகராட்சி அல்லது நகர சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு ஆனது, தங்கள் சொந்த அதிகார வரம்பில் வரிகள் அல்லது கட்டணங்கள் குறித்த முடிவினை மேற்கொள்ளும்.