TNPSC Thervupettagam

நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்

March 5 , 2023 503 days 308 0
  • நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு பெண்கள், அந்த மாநிலச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இரண்டு பெண்கள் என்ற வரலாற்றினைப் படைத்து உள்ளனர்.
  • ஹெகானி ஜகாலு மற்றும் சல்ஹௌடூநெள குரூஸ் ஆகிய இருவரும் நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்ஃபியூ ரியோ அவர்களின் தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்களில், எந்தப் பெண்ணும்  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட வில்லை.
  • இந்த ஆண்டில் நடைபெற்ற நாகாலாந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் நான்கு பெண்கள் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்