இந்திய இராணுவம் ஆனது நாக்பூரில் அமைந்துள்ள சூரியசக்தி தொழிற்சாலைகள் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நாகாஸ்த்ரா-1 எனப்படும் இலக்கினை மட்டும் குறி வைத்து தாக்கும் வகையிலான ஆயுதத்தினைப் படையில் இணைத்துள்ளது.
"தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் (காமிகேஸ்) பயன்முறையில்" செயல்படும் நாகாஸ்த்ரா-1, 2 மீட்டர் என்ற துல்லியத்துடன் புவியிடங்காட்டி மூலமான துல்லியமான தாக்குதல்கள் மூலம் எதிரி நாட்டு ஆயுதத் தாக்குதல்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளது.
மனிதர்களால் சுமந்துச் செல்லக்கூடிய வகையிலான இந்த நிலையான இறக்கை கொண்ட மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா வான்வழி வாகனம் ஆனது 30 நிமிடங்கள் தொடர்ந்து செயல்படும் திறனைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது மனித ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாட்டில் 15 கிலோமீட்டர்கள் தொலைவு வரை செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளது.
இது 30 கிலோமீட்டர் வரையிலான தொலைவு வரையில் தானாக இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.