ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தங்களுக்குள் பகிரப்பட்ட ஒரு எல்லையின் சர்ச்சைக்குரிய பிரிவுகளில் மீதான தீர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளன.
இரண்டு காகசஸ் நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் ஆனது, 1990 ஆம் ஆண்டுகளில் ஆர்மீனியா நாட்டினால் கைப்பற்றப்பட்ட நான்கு எல்லைப்புறக் கிராமங்களை அஜர்பைஜானுக்குத் திரும்ப வழங்குவதை உள்ளடக்கும்.
இந்த நடவடிக்கை மூலம் பகானிஸ் அய்ரம், அஷாகி அஸ்கிபாரா, கெய்ரிம்லி மற்றும் கிஜில்ஹாஜிலி ஆகிய நான்கு எல்லைப்புறக் கிராமங்கள் அஜர்பைஜான் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் 1990 ஆம் ஆண்டுகளிலும் 2020 ஆம் ஆண்டிலும் அப்போதைய நாகோர்னோ-கராபக் என்ற பிரிந்து சென்ற பகுதியின் மீதான கட்டுப்பாட்டிற்காக இரண்டு போர்களில் ஈடுபட்டன.