TNPSC Thervupettagam

நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை

August 11 , 2023 344 days 210 0
  • ப்ரோஸ்பினா என்றும் அழைக்கப்படும் நாக், ஒருமுறை சுடப்பட்டு அதன் பிறகு எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் தேவைப்படாத வகையிலான தாக்குதல் திறன் கொண்ட மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்திலான ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை ஆகும்.
  • நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணையானது, ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட மேலும் நான்கு ஏவுகணைகள் அக்னி, ஆகாஷ், திரிசூல் மற்றும் பிருத்வி ஆகியன  ஆகும்.
  • நாக் ஏவுகணை 4 கி.மீ. வரை உள்ள இலக்கைத் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • இது மிக அதிக வெடிப்புத் திறன் கொண்ட பீரங்கி எதிர்ப்பு (HEAT) ஆயுதத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்