2018 ஆம் ஆண்டு நவம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் மேகாலயாவில் உள்ள காசி மலைக் குன்றுகளில் உள்ள மக்களால் நாங்கிரேம் நடனத் திருவிழா கொண்டாடப்பட்டது.
வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகின்ற இத்திருவிழாவில் மக்கள் நல்ல அறுவடை, அமைதி மற்றும் சமூகத்தின் வளமை ஆகியவற்றுக்காக வேண்டிக் கொள்கின்றனர்.
காசி பகுதியின் பூர்வகுடிப் பழங்குடியினரின் துணைப் பழங்குடி வகையான ஹிமா கையிரிம் என்ற பிரிவின் ஆண் மக்களால் ‘கா ஷாத் மஸ்தே’ எனப் பெயரிடப்பட்ட ஒரு விந்தையான நடனம் இத்திருவிழாவில் ஆடப்படுகின்றது.