அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கிலோபவர் (Kilo Power) எனும் சிறிய அணுசக்தி உலையை கண்டுபிடித்துள்ளது. இந்த அணுசக்திக் கூடமானது அணு உலைமைய யுரெனியம் 235-ஐ (uranium-235 reactor core) பயன்படுத்தி நம்பகமான மின்ஆற்றல் அளிப்பை உற்பத்தி செய்ய வல்லது.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு சராசரி மின் பயன்பாடுடைய இரு வீடுகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு போதுமான மின் அளவான 10 கிலோவாட் மின்சாரத்தை இந்த கிலோபவர் அணு உலையால் உற்பத்தி செய்ய இயலும்.
எலக்ரானிக் உந்துதல் அமைப்பில் இந்த அணுஉலை (electronic propulsion systems) பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் நாசாவின் எதிர்கால செவ்வாய் மற்றும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டிய விண்வெளிப் பகுதிகளுக்கான ரோபோடிக் மற்றும் மனிதர்கள் பங்குபெறும் விண்கலத் திட்டங்களுக்கு பாதுகாப்பான மற்றும் மிகுதியான மின் ஆற்றலை வழங்க இயலும்.