TNPSC Thervupettagam
April 30 , 2024 208 days 231 0
  • மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும்  ஆய்வுப் பயண அமைப்பு (ACS3) என்று அழைக்கப்படும் நாசா நிறுவனத்தின் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்திற்கான சூரியஒளி ஆற்றல் பயணத் தொழில்நுட்பமானது சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
  • பூமியிலிருந்து சுமார் 600 மைல்களுக்கு மேலான தொலைவில் உள்ள சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதையை அடைந்ததும், ACS3 விண்கலம் அதன் ஒருங்கிணைந்தக் கருவிகளை இயங்கச் செய்து, அதன் சிக்கல் மிகுந்த செயல்முறையைத் தொடங்கும்.
  • தோராயமாக 25 நிமிடங்களுக்குள், சுமார் 860 சதுர அடி தொலைவிற்கு சூரிய ஒளியாற்றலைப் பெறும் செயல்முறை முழுவதுமாக மேற்கொள்ளப்படும்.
  • இந்தப் படலங்கள் ஒன்றாக சேர்ந்து, பட்டம் போன்ற வடிவை அடைந்து அதன் மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயங்கத் தொடங்குகின்றது.
  • இது சூரியனால் உமிழப்படும் ஃபோட்டான்களின் வேகத்தைப் பயன்படுத்தி, பெரிய, பிரதிபலிப்புத் திறன் கொண்ட மேற்பரப்புகளைப் பயன்படுத்தி வழக்கமாக பயன்படுத்தப் படும் எரிபொருள் இல்லாமல் விண்கலத்தைச் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்