நாசாவின் DSOC அமைப்பின் முதல் ஒளி மூலமான தரவுப் பரிமாற்றம்
December 16 , 2023
345 days
191
- நாசாவின் விண்வெளி ஒளியிழைத் தகவல் தொடர்பு (DSOC) அமைப்பானது அதன் "முதல் ஒளி மூலம் வழியான" தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொண்டுள்ளது.
- இந்த லேசர் மூலமான விண்வெளி தகவல் தொடர்பு அமைப்பு ஆனது தரவுகளை 10 மில்லியன் மைல்களுக்கு லேசர் மூலம் வெற்றிகரமாக அனுப்பியது.
- இந்த தொலைவானது, பூமியில் இருந்து நிலவு அமைந்துள்ள தொலைவினை விட 40 மடங்கு அதிகமாகும்.
- எனவே, இது தொலைதூரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒளியிழை சார்ந்த தகவல் தொடர்புகளின் செயல் விளக்கமாக மாறியது.
- சமீபத்தில் ஏவப்பட்ட சைக் என்ற விண்கலத்தில் DSOC பொருத்தப்பட்டது.
- சைக் ஆய்வுக் கலமானது, செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கிய குறுங் கோள் மண்டலத்தினை நோக்கிப் பயணிக்கிறது.
Post Views:
191