பூமியின் துருவப் பனிகளின் உயரத்தில் உள்ள மாற்றங்களை முன்எப்போதும் இல்லாத அளவிற்கு விரிவாக அளவிடுவதற்காக, மிகவும் மேம்படுத்தப்பட்ட சீரொளிக் (laser) கருவியை (Icesat-2) நாசா அறிமுகப்படுத்தவுள்ளது.
பனி, மேகம் மற்றும் நில உயர அளவீடு செயற்கைக்கோளானது, கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவைச் சூழ்ந்துள்ள நிலத்தின் பனியினுடைய சராசரி ஆண்டு உயர அளவீடுகளின் மாற்றங்களை அளவிடும்.
இது, நேரத்தின் அளவில் உயரத்தை அளவிடுவதற்கு, மேம்பட்ட நிலப்பரப்பு சீரொளி உயர அளவீடு அமைப்பைக் (ATLAS) கொண்டுள்ளது.