TNPSC Thervupettagam

நாசாவின் OSIRIS-Rex விண்கலம்

October 1 , 2023 422 days 316 0
  • சமீபத்தில், நாசாவின் OSIRIS-REx விண்கலம் ஆனது ஒரு பெட்டகத்தினைப் பூமியின் மேற்பரப்பில் விடுவித்து, அமெரிக்காவின் உட்டா எனுமிடத்தில் தரையிறக்கியது.
  • 101955 பென்னு என்ற குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து OSIRIS-REx விண்கலம் சேகரித்த சுமார் 250 கிராம் பாறைகள் மற்றும் தூசிகள் இதில் கொண்டு வரப் பட்டு உள்ளது.
  • OSIRIS-REx விண்கலமானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,650 அடி அகலம் (500 மீட்டர்) கொண்ட பென்னு குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது.
  • பென்னு என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு குறுங்கோள் (436 நாட்கள் சுழற்சி காலம் கொண்ட) ஆகும்.
  • பென்னு குறுங்கோள் 2178 மற்றும் 2290 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமி மீது மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்