நாசாவின் இன்சைட் (InSight) விண்கலமானது தனது ஆறு மாத கால பயணத்திற்குப் பிறகு செவ்வாயின் மேற்பரப்பில் எல்சியம் பிளானிடியா என்ற இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இது செவ்வாயில் தரையிறக்கம் செய்வதற்கான நாசாவின் 9-வது முயற்சியாகும். 1976ம் ஆண்டிலிருந்து வைகிங் விண்கலத்துடன் சேர்த்து மொத்தம் 8 விண்கலன்கள் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியுள்ளன.
கடைசியாக 2012-ல் நாசாவின் விண்கலன் ஒன்று செவ்வாயில் தரையிறங்கியது.
இன்சைட் ஆனது ஒரு செவ்வாய் ஆண்டான 24 மாதங்களை அங்கு செலவிடும்.
இன்சைட் ஆனது பூமியைத் தவிர வேறெங்கும் அளவிடப்படாத கோள் வெப்பம் மற்றும் நிலம் சார்ந்த ஒலிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகளை தன்னுடன் சுமந்து சென்றது.
இன்சைட் ஆனது புவி அதிர்வு (சீஸ்மிக்) ஆய்வு, புவிப்பரப்பியல் மற்றும் வெப்ப மாற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உள்ளக கண்டுபிடிப்பு (Interior Exploration Using Seismic Investigations, Geodesy and Heat Transport) என்பதன் சுருக்கமாகும்.