TNPSC Thervupettagam

நாசாவின் இரண்டு மெய்நிகர் யதார்த்தச் செயலிகள்

August 27 , 2018 2154 days 611 0
  • பயனர்கள் பகட்டான அண்ட இடங்களின் முன்னால் நின்று சுயபடம் எடுப்பதற்காக நாசா இரண்டு மெய்நிகர் யதார்த்த செயலிகளை உருவாக்கியுள்ளது.
  • இவை 1) நாசா சுயபடங்கள் 2) நாசாவின் வெளிக்கோள் சுற்றுலா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • நாசா சுயபடங்கள் செயலியின் மூலம் பயனர்கள் பல்வேறு அண்ட இடங்களின் முன்னால் நின்று மெய்நிகர் விண்வெளி ஆடைகளுடன் சுயபடங்கள் எடுக்க முடியும்.
  • நாசாவின் வெளிக்கோள் சுற்றுலாச் செயலியானது பயனர்கள் டிராப்பிஸ்ட் - 1 கோள் அமைப்புகளுக்கு மெய்நிகர் வழிகாட்டு சுற்றுலாவாக அழைத்துச் செல்லும். இது ஏறத்தாழ 5 கோள்களுக்கு அழைத்துச் செல்லும்.
  • நாசாவால் ஏவப்பட்ட ஸ்பிட்ஸர்7 விண்வெளி நோக்கியின் 15வது ஆண்டை நினைவு கூறும் விதமாக சுயபடங்கள் செயலி மற்றும் வெளிக்கோள் சுற்றுலா ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்