கனிமவியல் மற்றும் வேதியியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது செவ்வாய் கிரகத்திற்கு ‘சூப்பர்கேம்’ (SuperCam) என்ற புதிய லேசர் முறையிலான ரோபோவை அனுப்ப இருக்கின்றது.
சிவப்புக் கோளில் புதைபடிவ நுண்ணுயிர் வாழ்விற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலையுணர் கருவியான இது செவ்வாய்க் கிரகம் 2020 என்னும் விண்கலத்தில் உள்ள ஏழு கருவிகளின் ஒரு பகுதியாகும்.