சந்திரனில் நடக்க இருக்கும் முதலாவது பெண்மணி அணிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு விண்வெளி உடைகளை நாசா வெளியிட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காக அடுத்தத் தலைமுறை உடைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
ஆர்ட்டெமிஸ் திட்டமானது 2024 ஆம் ஆண்டிற்குள் முதலாவதுப் பெண்ணையும் அதற்கு அடுத்து ஒரு ஆணையும் சந்திரனில் தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்கலனுக்கு வெளியேயான ஆய்வுப் பயண அலகு (xEMU - exploration extra vehicular mobility unit) என அழைக்கப்படும் இந்த உடையானது சந்திரனின் மேற்பரப்பை, அதிலும் குறிப்பாக தென் துருவத்தை ஆராய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
முந்தைய தலைமுறை உடைகளை விட இந்த உடையானது மிகவும் நெகிழ்வானது. இது விண்வெளி வீரர்கள் உண்மையில் சந்திரனில் இயல்பாக நடப்பதற்கு உதவுகின்றது.
இதன் ஒரு அளவு அனைத்து விண்வெளி உடைகளுக்கும் பொருந்துகின்றது.