நாசா-இஸ்ரோ நிசர் (NISAR) என்பது புவிக் கண்காணிப்பிற்கான இரட்டை அதிர்வெண் L மற்றும் S பட்டை சார் அமைப்பிற்கான ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) செயற்கையான ஒரு துணை ரேடாரின் மேம்பாட்டை நிறைவு செய்துள்ளது.
இது தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்துடன் (NASA) இணைந்து கூட்டுப் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் திட்டத்திற்காக உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை உருவாக்கும் திறன் கொண்டது.
சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் நமது புவியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை அளவிடுவதற்காக 2 வெவ்வேறு ரேடார் அதிர்வெண்களை (L பட்டை மற்றும் S பட்டை) பயன்படுத்தும் முதலாவது செயற்கைக் கோள் திட்டம் இதுவாகும்.
நாசா மற்றும் பெங்களுருவில் அமைந்துள்ள இஸ்ரோவானது நிசாரைச் செலுத்துவதற்கு ஒன்றிணைவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு பங்காண்மை ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன.
நாசாவானது அத்திட்டத்தின் L பட்டை, அறிவியல் தரவிற்கான உயர் விகித தகவல் துணை அமைப்பு, புவியிடங்காட்டிக் கூறுகளைப் பெறும் கருவி, திட நிலையில் உள்ள சேமிப்பகம், தாங்கு சுமை தரவு துணை அமைப்பு ஆகியவற்றை அளிக்கின்றது.
இஸ்ரோவானது விண்வெளி வாகனம், S பட்டை ரேடார், ஏவு வாகனம் மற்றும் ஏவுதல் திட்டத்திற்குத் தொடர்புடைய சேவைகளை அளிக்கின்றது.