TNPSC Thervupettagam

நாசாவுடன் இஸ்ரோவின் நிசர்

March 13 , 2021 1263 days 678 0
  • நாசா-இஸ்ரோ நிசர் (NISAR) என்பது புவிக் கண்காணிப்பிற்கான இரட்டை அதிர்வெண் L மற்றும் S பட்டை சார் அமைப்பிற்கான ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) செயற்கையான ஒரு துணை ரேடாரின் மேம்பாட்டை நிறைவு  செய்துள்ளது.
  • இது தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்துடன் (NASA) இணைந்து கூட்டுப் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் திட்டத்திற்காக உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை உருவாக்கும் திறன் கொண்டது.
  • சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் நமது புவியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை அளவிடுவதற்காக 2 வெவ்வேறு ரேடார் அதிர்வெண்களை (L பட்டை மற்றும் S பட்டை) பயன்படுத்தும் முதலாவது செயற்கைக் கோள் திட்டம் இதுவாகும்.
  • நாசா மற்றும் பெங்களுருவில் அமைந்துள்ள இஸ்ரோவானது நிசாரைச் செலுத்துவதற்கு ஒன்றிணைவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு பங்காண்மை ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன.
  • நாசாவானது அத்திட்டத்தின் L பட்டை, அறிவியல் தரவிற்கான உயர் விகித தகவல் துணை அமைப்பு, புவியிடங்காட்டிக் கூறுகளைப்  பெறும் கருவி, திட நிலையில் உள்ள சேமிப்பகம், தாங்கு சுமை தரவு துணை அமைப்பு ஆகியவற்றை அளிக்கின்றது.
  • இஸ்ரோவானது விண்வெளி வாகனம், S பட்டை ரேடார், ஏவு வாகனம் மற்றும் ஏவுதல் திட்டத்திற்குத் தொடர்புடைய சேவைகளை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்