நாசிகா பத்ராசுஸ் பூபதி – புதிய வகை நாசிகா பத்ராசுஸ்
August 24 , 2017 2649 days 1164 0
நாசிகா பத்ராசுஸ் என்ற உயிரினத்தின் புதிய வகை தவளை மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதியில் பூர்வீகமாக காணப்படும் உயிரினமாகும். புதிதாகக் கண்டறியப்பட்டு இவ்வகை உயிரினத்தின் பெயர் நாசிகாபத்ராசுஸ் பூபதி (Nasikabatrachus bhupathi). இது பன்றியைப் போல் நீண்ட மூக்கினைக் கொண்டதாகும். இது மண்ணில் வாழும் ஊதா நிறத் தவளையாகும்.
இது ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள நரைத்த பெரிய அணில் வனவிலங்கு சரணாலயத்தில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளில் வசிக்கும் உயிரினமாகும்.
இது கண்டத்திட்டு பரவல் கருத்தியலை உறுதிசெய்யும் கூடுதல் சான்றாகும். அவ்வகையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தவளை செசல்ஸ் தீவுகளில் வசிக்கக் கூடியதாகும்.
இந்தியாவில் இதன் கண்டுபிடிப்பு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் செசல்ஸ் தீவிலிருந்து பிரிந்த பழைய கோண்ட்வானா நிலப்பகுதியின் ஒரு பகுதிதான் இந்தியத் துணைக்கண்டம் என்பதை உறுதி செய்கிறது.