TNPSC Thervupettagam

நாசிசம் மற்றும் நியோ நாசிசத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானம்

November 18 , 2022 612 days 284 0
  • ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட 'நாசிசத்தை மகிமைப்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் நியோ நாசிசத்தை எதிர்த்துப் போராடுதல்’ எனப்படும் ஒரு வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
  • இனவெறி, இனப் பாகுபாடு, வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சகிப்புத் தன்மையின்மையின் இதர சமகால வடிவ பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு பங்காற்றும் பிற நடைமுறைகளும் இதில் அடங்கும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவுத்  தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 105 நாடுகள் ஆதரவு அளித்தன.
  • 52 நாடுகள் (பெரும்பாலும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள்) இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், 15 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்